Thursday, 19 December 2013

ஒற்றுமையின் அவசியத்தினை வலியுறுத்திய கவியரசரின் காவிய வரிகள்.!! உங்களின் கனிவான கவனத்திற்கு !!






உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு !!



உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் 



எனது உயிரினும் மேலான அன்புத் 



தமிழ் உடன்பிறப்புகளே !! 



அனைவருக்கும் எனதுஉளங்கனிந்த 



காலை வணக்கங்கள் உரித்தாகுக!! 



அன்பு உள்ளங்களே !!                               



இன்றைய தினம் இந்தக்கட்டுரைக்கு 



நான் தலைப்பாகத் தேர்ந்தெடுத்த 



விஷயம் " ஒற்றுமை " ஆகும்.             



மகாகவி பாரதியார் இந்த 



ஒற்றுமையைப்பற்றி என்ன பாடல்  



பாடினார் என்று கேட்டால் :-                     


ஒன்று பட்டால் உண்டு வாழ்வு !!           

                                                           நம்மில் 


ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும்     

                                                          தாழ்வே!! 


நன்றிது தேர்ந்திடல் வேண்டும் --         

                                                                  இந்த 


ஞானம் வந்தாற்பின் நமக்கெது             

                                                     வேண்டும்!!



அன்பர்களே !!                                                 


 

                    " ஒ  ற்  று  மை " !!                         



இந்த ஒரு வார்த்தையில்தான் 



ஒளிந்து கிடக்கிறது எவ்வளவு 



பெரிய உணர்வு பூர்வமான 



உண்மை. இந்த உணர்வுகள் நம் 



ஒவ்வொருவரிடமும் இல்லாத 



காரணதால்தான் இன்று இந்த 



நாட்டினில் எவ்வளவு, எவ்வளவு, 



பிரச்சினைகள்,எத்தனை, எத்தனை 



சிக்கல்கள் உருவாகி அதன் 



விளைவாக நம்நாட்டின் 



ஒன்றிணைந்த பல மாநிலங்களில் 



மண்ணுக்கு சண்டை !!   மொழிக்கு 



சண்டை !!    தண்ணீருக்கு சண்டை !! 



தன்னிகரில்லாத  மின்சாரத்திற்கு 



சண்டை !! சண்டை !! 



எதற்கெடுத்தாலும் சண்டை !!   



சச்சரவு !!  போராட்டம் !! 



முழுஅடைப்பு !! தடியடி !! 



கண்ணீர்புகை குண்டுகள் வீச்சு !!   



துப்பாக்கிச் சூடு !! கலவரம் !! இரயில் 



மறியல் !! என சங்கிலித் தொடர்என  



இது போன்ற நிகழ்வுகள் !!  இதற்கு 



எல்லாம் என்ன மூல காரணம் ? 



இவைஎல்லாமேஒற்றுமையின்மை 



என்ற தாய் ஈன்றெடுத்த பல்வேறு 



வகையான, நிறங்களானா 



பிள்ளைகள்தானன்றி வேறு என்ன 



நான் சொல்வது ?                                   



ஆக இதுபோன்ற அத்தனை 



நிகழ்வுகளும் இந்த பூமிதனில் 



உருவாகி அரங்கேறுவதற்கு 



காரணமே  " ஒற்றுமை "  என்கின்ற 



அந்த உணர்வுகள் நம்நாட்டு 



மக்களிடையே இருந்து 



விடைபெற்றுச் சென்று விட்டதன் 



எதிரொலியே அன்றி வேறு எதுவும் 



இல்லை அன்பர்களே !!   



இந்த வகையான ஒற்றுமையின் 



அவசியத்தை வலியுறுத்திய 



கவியரசரின் காவிய வரிகளை 



நினைவு படுத்திய பாடல் பல திரைப் 



படங்களில் இடம் பெற்று 



இருந்தாலும் கூட, அவை 



அத்தனையிலும் நான் மிக 



முக்கியமானதொரு பாடலாகக் 



குறிப்பிடவிரும்புவது,யாதெனில், 



"பாகப்பிரிவினை" என்ற 



திரைப்படத்தில் வரும் இந்த 



பாடலை மட்டுமே !! இப்போது 



பாடலைப் பாருங்கள் அன்பர்களே!!   


தொகையறா :-


மந்தரையின் போதனையால் மனம்  

                                       மாறிக் கைகேயி !!

மஞ்சள் குங்குமம் இழந்தாள் !!           


வஞ்சக  சகுனியின் சேர்க்கையால்!!   

                                             கௌரவர்கள் !! 


 பஞ்ச பாண்டவரைப் பகைத்து               


                                                   அழிந்தார் !! 


சிந்தனையில் இதையெல்லாம் 


சிறிதேனும் கொள்ளாமல் மனிதர்      

                                                      எல்லாம் !! 


மந்த மதியால் அறிவு மயங்கி 


மனம்போனபடி நடக்கலாமோ ?         



சரணம் :-



ஒற்றுமையாய் வாழ்வதாலே !!              

                         உண்டு நன்மையே !! 


வேற்றுமையை வளர்ப்பதனாலே !!   


                       விளையும் தீமையே !!       


                                           (ஒற்றுமையாய் )



உணர்வோடு ஒன்றியே !!



உருவாகும் பாசமே !!                                  



அணையாத தீபமாய் !!                       



சுடர் என்றும் வீசுமே !!       



உணர்வோடு   ஒன்றியே !!                     



உருவாகும் பாசமே !!                                 



அணையாத தீபமாய் !!                               



சுடர் என்றும் வீசுமே !!                



நெஞ்சில் உண்டான அன்பையே !!     



துண்டாடி வம்பையே !!                    



உறவாகத்  தந்திடும்  சிலர்                       



சொல்லை நம்பியே !!                                 



வேற்றுமையை வளர்ப்பதினாலே !!   


                              விளையும் தீமையே !! 


ஒற்றுமையாய் வாழ்வதாலே !!       


                                  உண்டு நன்மையே !! 


வேற்றுமையை வளர்ப்பதனாலே !! 



                              விளையும் தீமையே !!


                                       (ஒற்றுமையாய் )             


துணையின்றி வெண்புறா !!               


தனியாக வந்ததேன் ?                               


வனவேடன் வீசிய வலைதன்னில்       

                                                வீழ்ந்ததேன் ? 


இனம் யாவும் சேர்ந்துதான்                     


அதை மீட்டுச் சென்றதே !!                   


கதையான போதிலும்  !!                         


கருத்துள்ள பாடமே !!                            



வேற்றுமையை வளர்ப்பதனாலே 



விளையும் தீமையே !!             



ஒற்றுமையாய் வாழ்வதாலே 


                                  உண்டு நன்மையே !!


வேற்றுமையை வளர்ப்பதினாலே !!   


                              விளையும் தீமையே !! 


ஒற்றுமையாய் வாழ்வதாலே !!             

                                  உண்டு நன்மையே !! 


 வேற்றுமையை வளர்ப்பதினாலே !!   


                               விளையும் தீமையே !! 



எனவே அன்பர்களே  !!                               



நாம் இதுவரை வாழ்ந்திருந்த 



காலங்களில்   எப்படி எப்படியோ !! 



இனிமேலும் நாம் வாழ்ந்திட 



இருக்கின்ற காலங்களிலாவது நாம் 



அனைவரும் நம்முடன் சேர்ந்து   



இருக்கும் உண்மையான 



உறவுகளோடும் நண்பர்களோடும் 



எந்தவிதமான பகை உணர்வுகள் 



ஏதுமில்லாமல், இந்த பூமிக்கே ஒரு 



உதாரணம் மிக நிறைந்த 



நிகழ்வுகளாக நாம் அனைவரும் 



சண்டை சச்சரவுகள் ஏதுமின்றி 



வாழ்ந்திருப்போம் என்னும் மன 



உறுதிப்பாடினை இன்றுமுதல் நாம் 



அனைவரும் மேற்கொள்வோமாக !! 



என்று இந்த அமைதி தவழும் 



காலைவேளையில் வீசிடும் 



தென்றல் காற்றின்  தூய்மை மனம் 



வீசிடும் அந்தத் தென்றலின் மீதுநாம் 



அனைவரும் சத்தியம் 



செய்திடுவோம் நம் இனமான 



உணர்வுகளின்  வலிமைக்குப் 



பெருமை சேர்த்திடுவோம் !! என்று 



சொல்லி எனது கட்டுரையை நான் 



இங்கே நிறைவு செய்கிறேன் !!           



நன்றி !! வணக்கம் !!                                     




அன்புடன் !! மதுரை T.R. பாலு M.A.S.,

































































































































































































































































































































































































































No comments:

Post a Comment