தொடர்ச்சி......பாகம் எண் :-2." விவாகரத்து " ( மனமுறிவு) என்னும் நிகழ்விற்கு அதிகம் தூண்டுதலாக இருப்பது,? கணவனா ? அல்லது மனைவியா? --ஒரு சமூக சிந்தனை உள்ள ஆராய்ச்சிக்கு உரிய அற்புதம் செறிந்த உதாரணங்கள் நிறைந்த கட்டுரை !!--உங்கள் கனிவான கவனத்திற்கு !!
" அச்சம் என்பது மடமையடா " !!
" அஞ்சாமை திராவிடர் "
" உடமையடா " !!
பாகம் எண். 1. (கடைசிப் பகுதி..............)
இப்போது நடுவர் தமது உரையினை
ஆரம்பித்து பேசிடத் துவங்குகிறார்.
இனிமேல் அன்னார் (பேசிடத்
துவங்குவது முதல் இறுதிவரை
LIVE DOCUMENT ஆக ) உரையைக்
கேட்போமா ? மன்னிக்கவும்.
படிப்போமா ? என் அன்புத் தமிழ்
நெஞ்சங்களே !!
நடுவரின் உரை :-
பேரன்புமிக்க பெரியோர்களே, இந்த
அவைதனில் அமர்ந்திருக்கும்
ஆன்றோர் பெருமக்களே !! அன்பு
ஒன்றையே தங்களதுஅணிகலனாக
அணிந்து இங்கே அமர்ந்திருக்கும்
தாய்க்குலத்தின் பிரதிநிதிகளே !!
வருங்கால சமுதாயத்தின் ஆற்றல்
மிகுந்த தூண்களே !! இளம்
சிறார்களே !! முதற்கண் உங்கள்
அனைவருக்கும் எனது இதயம்
கனிந்த,கரம் குவிந்த, அன்புமட்டுமே
நிறைந்த வாழ்த்துக்களுடன் கூடிய
வணக்கத்தைதெரிவித்துக்கொள்ளக்
கடமைப் பட்டிருக்கிறேன் என்
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
சிந்தனைநோக்கம்உள்ளநல்லஒரு
பட்டிமன்றத்தினை ஏற்பாடு
செய்திட்ட மன்றத்தின்
உறுப்பினர்களை என்னால்
பாராட்டாமல்இருக்கமுடியவில்லை
என் அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
(அன்பர்களே !! ஒரு சிறிய விளம்பர
இடைவேளைக்குப் பிறகு இங்கே
நடுவர் அவர்களின் வரலாற்றுச்
சிறப்பு மிக்க உரையும், விளக்கமும்,
இறுதியாக, அன்னாரது தீர்ப்பும்
வரக்காத்துக்கொண்டு இருக்கிறது.
படித்து இன்புறுக !!நன்றி.வணக்கம்!!
(தொடரும்).................
தொடர்ச்சி........பாகம் எண்:-2.
நடுவர் உரையின் தொடர்ச்சி................
அன்பர்களே !!
இந்த சுவைமிகு பட்டிமன்றத்தில்
தலைப்பாக கொடுக்கப்பட்டுள்ள
விஷயம், விவாக ரத்து (மன முறிவு)
இதற்கு முழுமுதல் காரணம் என்ன
என்றுயோசித்துப்பார்த்தால்,நமக்கு
கிடைத்திடும் முதல் விடைதான்
இந்த " தனிக்குடித்தனம் " என்பது.
ஆம் !! அன்பர்களே !! இந்தத் தனிக்
குடித்தனம், இந்த மன முறிவு என்ற
ஒரு நிகழ்விற்கு மட்டும் காரண
கர்த்தாவாக செயல் படுவது என்பது
கிடையவேகிடையாதுஅன்பர்களே!!
பலவிதமான ஒழுக்க சீர்கேட்டிற்கும்
நன்நடத்தை நெறிமுறை
பிறள்வுகளுக்கும், இந்தத் தனிக்
குடித்தனம் என்பது, பலவகையிலும்
ஒத்துழைப்பு நல்கி,வெட்கக்கேடான
பலவற்றைசமுதாயத்தால்வெறுத்து
ஒதுக்கப்படும் கற்பு நெறியில்
இருந்து, அது ஆணாக இருந்தாலும்
சரி, இல்லை பெண்ணாக
இருந்தாலும் சரி, தனிக்குடித்தனம்
என்ற ஒரு வாழ்க்கை முறை
இவர்களுக்கு, வாழ்வின் ஒழுங்கு
நடைமுறையினின்றும், தடம்
புரண்டு வாழ்வதற்கு
பலவகையிலும் உதவி புரிகின்றது
என்பதுதான் எங்களைப்போல
அந்தக் கால மனிதர்கள்
சுமத்துகின்ற முதல் குற்றச்சாட்டு.
பொதுவாக, அன்பர்களே, இந்த
உலகித்தில் எந்த ஒரு ஆணும்
கற்புக்கு அரசர்களும் கிடையாது.
அதுபோலத்தான்,(இந்த இடத்தில்
தாய்குலங்கள் என்னை
அருள்கூர்ந்து மன்னித்திட
வேண்டுகிறேன். என்னடா !! இது !!
நம்ம மதுரை T.R.பாலு அய்யா
அவர்கள், இப்படிப் பொத்தாம்
பொதுவாக, பெண்குலம்
அனைவரையும் பற்றி இப்படிப்
பொதுமன்றத்தில் குற்றம்
சுமத்துகிறாரே என்று எண்ணி என்
மேல் சினம் கொண்டுவிடக்கூடாது)
என்று எனது அன்பு நிறைந்த
பெண்குலக் கண்மணிகளே !!நான்
இங்கே தனிப்பட்ட முறையில்
அனைவரையும் பற்றி இங்கே
குறிப்பிடவில்லை. நெல் பயிருக்கு
நடுவில் சில புல்லுருவிகள்
முளைத்தது போல, சில பேர்
இருக்கத்தான் செய்கிறார்கள். நான்
இங்கே அவர்களைப்பற்றித்தான்
கூறிடக் கடமைப்பட்டு உள்ளேன்
அன்பர்களே !! எனவே நீங்கள்
யாரும் மனமதில் வருத்தப்
படக்கூடாது. நான் 6௦ வயதினை
தொட்டுக்கொண்டு வாழ்ந்து
கொண்டு இருப்பவன். எத்தனை
சம்பவங்களை நான்
நேரில்,அக்கம்பக்கத்தில் பார்த்து
இருப்பவன், அந்த அடிப்படையில்
சொல்லக் கடமைப்பட்டு
இருக்கிறேன் அன்பர்களே !!
அதுபோலவேதான், பெண்களிலும்
கற்புக்கு அரசிகள் கண்ணகி
வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்று
யாரும், எவரும்,கிடையவே
கிடையாது என் அன்புத் தமிழ்
நெஞ்சங்களே!! சந்தர்பங்களும்
சூழ்நிலைகளும் சாதகமாக
அமைந்துவிட்டால் இங்கே கற்புக்கு
அரசி கண்ணகிகள் என்று எவருமே
கிடையாது )இந்தக் கருத்தை
மையமாக வைத்துத்தான் ஒரு
முறை பேரறிஞர் அண்ணா
அவர்களும் திரைப்பட நடிகை
பானுமதி அவர்களும இணைந்து,
அறிஞர் அண்ணா அந்தப் படத்திற்கு,
வசனகர்த்தாவாகவும், திருமதி
பானுமதி அவர்கள்,
கதாநாயகியாகவும் ஒருசேர
பணியாற்றிக்கொண்டு வரும்
சமயத்தில், இவர்கள் இருவரும்
அடிக்கடி ஒன்றாக,இணைந்து
இருப்பதும், கலந்து உரையாடுவது
என்பதும் தவிர்க்க முடியாத
சூழலில், கசமுசா என்று ஒரு பேச்சு
இவர்கள் இருவரையும் இணைத்து
பேசப்பட்ட சூழலில், ஒருமுறை
நிருபர்கள் கூட்டத்தில் ஒரு
துணிச்சல் மிகுந்த நிருபர் ஒருவர்
பேரறிஞரிடம் நேரிடையாகவேஇந்த
கேள்வியை, மனத்தில் சற்று
அசாத்திய துணிச்சலுடன் கேட்டே
விட்டார், என்னவென்றால்(LIVE) :-
நிருபர் :- பேரறிஞர் அவர்களே !!
தற்போது இந்தத் திரைப்பட
உலகத்தில் ஒரு விஷயம் மிகவும்
பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது
என்பது தாங்கள் அறிவீர்களோ
இல்லையோ அது எனக்குத்
தெரியாது.ஆனால் அந்த பேச்சு
தங்களையும், நடிகை பானுமதி
அவர்களையும் பற்றியதுதான்.
அறிஞர் அண்ணா:-( தனக்கே
உரித்தான அந்த கரகரப்புகுரலில்)
அது என்ன பேச்சு தம்பி!!
நானும்தான்சற்றுஅதனைத்தெரிந்து
கொள்கிறேனே, நீங்கள் அதற்கு
சம்மதம் தெரிவித்து என்னிடம்
அதைப்பற்றி விளக்கமாக
சொல்வீர்களேயானால்?
நிருபர் :- அண்ணா ......கேட்பதற்கு.....
எனக்கே... சற்று...கூச்சமாகவும்...
பயமாகவும் இருக்கிறது. நீங்கள்
என்மேல் கோபித்துக்கொள்ளக்
கூடாது, கோபித்துக்கொள்ள
மாட்டீர்கள் என்றால் நான் அந்தக்
கேள்வியை தங்களிடம் கேட்பதற்கு
எனக்கு எந்தவிதமான தயக்கமும்
இல்லை.
அண்ணா :- தம்பி !! கோபம் !! அது
மனித வாழ்வின் சாபம். அதனை
என்றுமே என் வாழ்வின் ஒவ்வொரு
நிகழ்வினிலும் அனுமதித்தது
என்பது கிடையவே கிடையாது.
தம்பி கோபத்தை மறந்துவிடு!!
அந்தக் கொடிய பழக்கத்தை
நிறுத்திவிடு !!
நாவடக்கம் இல்லா வாழ்கையில்
"ஆபத்து " நாடி வரும் !! உன்னைத்
தேடி வரும் !! தம்பி !! கோபத்தை
மறந்து விடு !!
என்று எனது அன்புத் தம்பிகட்கு
கவிபுனைந்தவன் நான். எனவே என்
வாழ்வினில் நான் இதுவரை,
எந்தவிதமானகோபதாபங்களுக்கும்
கிஞ்சித்தும், எள்ளின் முனையளவு
கூட இதுகாறும் இடம்கொடுத்தவன்
அல்ல. எனவே தாங்கள்
தைரியமாகக் கேட்கலாம் நீங்கள்
என்னிடம். கேளுங்கள் தம்பி !!
நிருபர்:- தங்களையும் நடிகை
பானுமதியையும் இணைத்துப்
பலவிதமான பேச்சுக்கள் இங்கே
பேசப்படுகிறது, நாட்டினில்,
என்பதனைத் தாங்கள் அறிவீர்களா?
அண்ணா:-(சிலவினாடிகள் அமைதி)
என் அன்புத் தம்பி !! நான்உங்களைப்
பாராட்டிடக் கடமைப் பட்டுள்ளேன்.
எதற்கு என்றால், நீஎங்கள்
உள்ளத்தில் உள்ளதை உதட்டிலும்
வைத்தீர்கள் அல்லவா ?
அதற்காகத்தான் . நான் உங்கள்
கேள்விக்கு இந்தஇருவரிகளில்தான்
என்னால்பதில்கூறிடஇயலும்.
இயலும் என்று குறிப்பிடுவதை விட
சொல்ல விரும்புகிறேன் என்று
பதிவு செய்வதே சாலச்சிறந்த
ஒன்றாக இருக்கும் என்றே
கருதுகிறேன்.
அது என்ன என்றால் :-
1) நான் ஒன்றும் முற்றும் துறந்த
உண்மையான முனிவரும் அல்ல !!
2) அதுபோலவே, நீங்கள்
குறிப்பிட்டுள்ள நபர் (இந்த இடத்தில்
அண்ணா அவர்கள், சம்பந்தப்பட்ட
நடிகையின் பெயரைக் கிஞ்சித்தும்
குறிப்பிடவில்லை, அதுதான் அவர்
பேரறிஞர் என்பது) ஒன்றும்
படிதாண்டா பத்தினியும் அல்ல !!
நான் எதற்காக இந்த கடந்தகாலம்
அதில் இடம்பெற்ற அந்த
சம்பவத்தை இங்கே
குறிப்பிடுகிறேன் என்றால்
அன்பர்களே !! அது ஒரு ஆணாக
இருந்தாலும் சரி, அல்லது ஒரு
பெண்ணாக இருந்தாலும் சரி,
கற்புநெறி என்பது இருபுறமும்
கூர்மை தீட்டப்பட்டுள்ள கத்தி
என்பதை நாம் யாவரும் நமது
அறிவினில் முதலில் பதிவு செய்து
கொள்ள வேண்டுகிறேன்
அன்பர்களே. ஆண்மகன் எங்கு
வேண்டுமானாலும் போகலாம். யார்
வீட்டு இலையிலும் "உண்ணலாம் ",
ஆனால் இவன் மனைவி மட்டும்
இந்த அற்புத குணம் நிறைந்த
கணவனை மட்டுமே கனவினிலும்
நினைத்துகொண்டு இருக்க
வேண்டும், என்று இந்த ஆண்
ஆதிக்க சமுதாயம் எதிர்பார்த்துக்
கொண்டு இருப்பது எந்தவகையில்
நியாயம் என்று கேட்க
விரும்புகிறேன். முதலில் நீ உனது
மனைவிக்கு விசுவாசமாக இருக்க
முயற்சி செய். அப்படி இருந்தால்உன்
மனைவியும் உன்னிடம்
விசுவாசமாகவே இருப்பாள். அதை
விட்டு விட்டு நீ மட்டும் எந்தவீட்டு
இலையிலும் (சிலசமயங்களில்
எச்சில் இலையிலும்கூட)
சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு
வருவீர்களாம், ஆனால் அதே சமயம்
உன் மனைவி தற்செயலாகக்கூட
அடுத்த வீட்டு,பக்கத்துவீட்டு,எதிர்த்த
வீட்டு ஆணுடன் (எந்தவிதமான
கெட்டஎண்ணத்துடனும்இல்லாமல்)
தற்செயலாகபேசிக்கொண்டுஇருந்
தாலே போதும், இந்தக்கணவனின்
மூஞ்சி,முகறக்கட்டை போகின்ற
போக்கினைப் பார்க்கணுமே !!அடடா
இஞ்சிதின்னகுரங்குதான்போங்கள்)
நான் எதற்காக இதை இங்கே
குறிப்பிடுகிறேன் என்றால்
அன்பர்களே!! இங்கும் என்னால்
பேரறிஞர் அண்ணா அவர்கள்
சொன்ன கருத்தைப் பதிவு
செய்திடாமல் இருந்திட
இயலவில்லைஅண்ணாசொன்னார்:
தம்பி !! அடுத்தவனை நோக்கி நீ உன்
ஆள்காட்டி விரல் நீட்டி குற்றம்
சுமத்துகின்ற போது, உன்னை
நோக்கி உனது ஏனைய மூன்று
விரல்கள்,நீட்டிக்கொண்டு
இருக்கின்றன தம்பி !! முதலில்
உன்னைச் சரி செய்து கொண்டு,
உன்னைத் திருத்திக்கொண்டு,
அதற்கு அப்புறம் நீ அடுத்தவன்மேல்
குற்றம் சுமத்து!! பழி போடு !!
என்றார் அவர். அதனால் தான்
மட்டுமே அவர் அறிஞர் அல்ல
அன்பர்களே பேரறிஞர் என்பது. ஆக
இந்த மன்றத்தில் நான் இந்தப்
பட்டிமண்டப தலைப்பில் மனமுறிவு
எதனால் நிகழ்கிறது ?, இதற்கு
உண்டான அடிப்படைக் காரணங்கள்
என்னென்ன ? என்பதை விளக்கிக்
கூறிடும் முகமாக பதிவு செய்திட
விரும்பும் முதல் குற்றச்சாட்டு,
அடிப்படைக்காரணம், இந்த
தனிக்குடித்தனம் ஆகும். இன்னும்
இங்கே இதில், ஏராளமான குற்றச்
சாட்டுக்களை நான் உங்கள்
அனைவரின் கவனத்திற்கும்
கொண்டு வரக் காத்துக்கொண்டு
இருக்கறேன். இந்தக் குற்றங்கள்
களையப்படும் வரை,
புரிந்துகொண்டு,அவற்றை நாம்
நீக்காதவரை, இந்த நாட்டினில்
விவாகரத்து(மனமுறிவு) என்பது
தவிர்க்கவே முடியாது. இவைகள்
இருக்கும் வரை இந்த மனமுறிவு
என்னும் நிகழ்வு
நடந்துகொண்டேதான் இருக்கும்.
இதுதான் மனித வாழ்க்கை என்னும்
புத்தகத்தின் எந்தப் பக்கத்தை
புரட்டினாலும், காணப்படும் பாடம்,
பகுத்தறிவு, பயனுள்ள அரசியல்
தத்துவம். (தயவு செய்து இந்த
இடத்தில் தலைவர் கலைஞரின்
வரலாற்றுப் பதிவேடான பராசக்தி
திரைப்படத்தில் அவர் தீட்டி உள்ள
வசனத்தை உங்களின்
அனுமதியுடன் சிறிதுநேரம் கடன்
வாங்கிப் பயன்படுத்திக்
கொள்கிறேன் அன்பர்களே !!)
இன்னும் இந்த விவாத மேடையில்,
சுவைமிகுந்த பட்டிமன்றத்தில், நான்
ஏராளமான விஷயங்களைப் பற்றி
விளக்கிக் கூறிடக் காத்துக்கொண்டு
இருக்கிறேன். ஆனால் ? அது
இப்போது அல்ல !! நாளைதான் !!
அதுவரை சற்று பொறுமையுடன்
இருந்திட வேண்டிக் கேட்டுக்
கொண்டு, மீண்டும் நாளை உங்கள்
அனைவரையும் சந்திக்கிறேன்
என்று சொல்லி பிரியாவிடை
அளித்திட வேணுமாய்க் கேட்டுக்
கொண்டு இந்த அளவிலே
தற்காலிகமாக நிறைவு செய்கிறேன்
அன்புத்தமிழ் நெஞ்சங்களே!
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் !! மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment