உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
உலகம் முழுவதும் வாழ்ந்துவரும்
என் உயிரினும் மேலான அன்புத்
தமிழ் நெஞ்சங்களே !!
உங்கள் அனைவருக்கும் எனது
இனிய காலை வேளை கனிவு
நிறைந்த வணக்கங்கள். நிற்க.
இந்தக் கட்டுரையை தமிழ் இனத்
தலைவர், முத்தமிழ் அறிஞர்,
திராவிட முன்னேற்றக் கழகத்தின்
தலைவர்:கலைஞர்
திரு.மு.கருணாநிதி அவர்களின்
மேலான பார்வைக்கும், மிசா
கொடுமைச் சிறைதனில் தனது
சுதந்திர இறக்கைகளை விரித்து
பறந்த வெண் புறா என் மதிப்பிற்கும்
மரியாதைக்கும் உரிய மாண்புள்ள
தளபதிதிரு.மு.க.ஸ்டாலின்
அவர்களுக்கும் விருந்தாகப்
படைப்பதில் மட்டட்ற மகிழ்ச்சி
அடைகின்றேன்.
இப்பவும் நான் இன்று இந்த
பதிவகத்தில் பதிவு செய்திருக்கும்
தலைப்பு என்னவென்றால்,
மானம்,ஈனம்,ரோஷம்,வெட்கம்
இவை அத்தனையும் கெட்ட ஒரு
அரசியல் கட்சி என்று ஒன்று
இந்தியாவில் இருக்குமேயானால்
அதிலும் குறிப்பாகச் சொல்லிட
வேண்டும் எனில் அந்தப் பெருமை
முழுவதும் தமிழ்நாட்டினில் உள்ள
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை
தவிர வேறு எந்தக் கட்சிக்கு இங்கே
இந்தப் பெயர் இருந்திட முடியும் ?
அன்பர்களே !!
அந்த கேடுகெட்ட அரசியல்கட்சியில்
இன்னமும் பங்கு எடுத்துக்கொண்டு
இருக்கும் உண்மைத் தொண்டர்கள்,
இவர்களுக்காக, இவர்களது,அறிவுக்
கண்களை,இருக்கும் கொஞ்சநஞ்ச
தன்மான உணர்வுகளைத் தட்டி
எழுப்பிட வேணுமாய்முடிவெடுத்து
அவர்களுக்கு ஒரு மூளைச் சலவை
செய்து அவர்களுக்கு பாடம்
புகட்டிடவேண்டி எண்ணி இந்தக்
கடந்த கால வராலற்று
உண்மைகளை எடுத்து உரைக்கும்
காலத்தால் அழித்திட இயலாதநல்ல
கட்டுரையை நான் எழுதலானேன்.
எனது மனத்தில் உள்ள
கருத்துக்களை இரண்டு நண்பர்கள்
உரையாடல் மூலமாக உங்களுக்கு
எடுத்துக்கூறிடக் கடமைப்பட்டு
உள்ளேன். படித்துப் பார்த்து எனது
தளத்தில் தங்களது பொன்னான
விமர்சனங்களை வெளிப்படுத்திட
வேணுமாய் வேண்டி விரும்பிக்
கேட்டு விடைபெறுகின்றேன் அன்பு
உள்ளங்களே !!
அன்பு உள்ளங்களே !! நான்
ஏறத்தாழ 42 ஆண்டுகள்பின்னோக்கி
செல்கிறேன். அது 1971ம் ஆண்டு.
மறைந்த பாரதப் பிரதமர்
"உண்மையான " புரட்சித் தலைவி
அன்னை இந்திராகாந்திஅம்மையார்
என்ன செய்தார் என்றால்
தன்னுடைய புரட்சிகரமான
நாட்டுநலத் திட்டங்களுக்கு
(வங்கிகள் நாட்டுடைமை, மன்னர்
மானிய ஒழிப்பு இதுபோன்ற )
அன்றைய ஒன்றுபட்ட காங்கிரஸ்
பேரியக்கத்தில் இருந்த பழம்
பெருச்சாளிகள் (மறைந்தமொரார்ஜி
தேசாய், V.V.கிரி, நீலம்சஞ்சீவரெட்டி,
நிஜலிங்கப்பா, போன்றவர்கள்) கடும்
எதிர்ப்பு தெரிவித்து விட்டதால்,
"உண்மையான" புரட்சித் தலைவி
அன்னை இந்திராகாந்திஅம்மையார்
என்ன செய்தார் என்றால், ஒன்று
பட்ட காங்கிரஸ் பேரியக்கத்தையே
இரண்டாக உடைத்தார்.
பழம்பெருச்சாளிகள் தங்கள்
கட்சிக்கு ஸ்தாபன காங்கிரஸ்
என்றும் பழைய காங்கிரஸ் எனவும்
பெயரிட்டுக்கொண்டனர்.தேர்தல்
ஆணையம் பழைய காங்கிரஸ்
கட்சியின் பதிவு செய்த சின்னமான
நுகத்தடி பூட்டிய காளை சின்னத்தை
இந்தப் பழைய காங்கிரஸ் கட்சிக்கே
வழங்கியது. "உண்மையான"
புரட்சித் தலைவி அன்னை
இந்திராகாந்தி அம்மையார் என்ன
செய்தார் என்றால் தாமும் தம்மைப்
பின்பற்றிய பாராளுமன்ற
உறுப்பினர்களையும் கட்சியின்
அடிமட்டத் தொண்டர்களையும்
மேல்நிலைத் தலைவர்களையும்
கொண்டுள்ள இந்த அமைப்பினை
ஒரு அரசியல் கட்சியாகவே தேர்தல்
ஆணையத்தில் பதிவு செய்து அந்தக்
கட்சிக்கு " இந்திரா காங்கிரஸ் "
என்று பெயரிட்டு அந்த புதிய
கட்சிக்கு தேர்தல் ஆணையம் தந்த
சின்னம் " பசுவும் கன்றும் " ஆகும்.
அதன் பின்னர் "உண்மையான"
புரட்சித் தலைவியான அன்னை
இந்திராகாந்தி அம்மையார் என்ன
செய்தார் என்றால் பாராளுமன்ற
தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுகால
இடைவெளி இருந்திட்டபோதிலும்
இவர் என்ன செய்தார் என்று
கேட்டால் 1972ம் ஆண்டு நடைபெற
வேண்டிய பாராளுமன்ற தேர்தலை
"உண்மையான " புரட்சித் தலைவி
அன்னை இந்திராகாந்திஅம்மையார்
தனது அரசியல் செல்வாக்கினை
நிலைநிறுத்திக் கொள்ள, மேலும்
பெருக்கிக் கொள்ள எண்ணி ஓர்
ஆண்டுக்கு முன்பாகவே 1971ம்
ஆண்டிலேயே நடத்திட முடிவு
செய்தார். கிட்டத்தட்ட இதே
அரசியல் சாதுரியத்தினை நமது
தமிழ் இனத் தலைவர் முத்தமிழ்
அறிஞர் தி.மு.க. தலைவர் கலைஞர்
மு.கருணாநிதி அவர்களும்
கடைப்பிடித்தார் என்பதே உண்மை.
பேரறிஞர் அண்ணாவின் திடீர்
மறைவிற்கு பின்னர் முதல்வர்
நாற்காலியில் அமர்ந்தார் 1969ம்
ஆண்டு. இரண்டு ஆண்டுகள் நல்ல
பல திட்டங்கள் தமிழகத்தில் அமல்
படுத்திய தலைவர் தாமும் ஏன்
ஓராண்டுக்கு முன்பாக
பாராளுமன்றத் தேர்தலோடுகூட
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கும்
சேர்த்து தாமும் தேர்தலைநடத்திடக்
கூடாது என்று தனது அரசியல்
ஆலோசகரும் தனது மருமகனும்,
மறைந்த முன்னாள் மத்திய
அமைச்சருமான முரசொலி
மாறனுடன் சேர்ந்து ஆலோசனை
நடத்தினார். முடிவும் எடுத்து
அதுபோலவே சட்டமன்றத்தைக்
கலைத்து பாராளுமன்றத்
தேர்தலோடுகூட நடத்திட
ஆளுநரிடம் அப்போதையதமிழ்நாடு
அமைச்சரைவையின் பதவிவிலகல்
கடிதத்தைத் தந்து தேர்தலை
எதிர்நோக்கி இருக்கும் கால
கட்டத்தில்தான், தற்காலிக
முதல்வராக பதவியில் இருந்த
தலைவர் கலைஞர் அவர்களுக்கு
தலைநகர் புதுதில்லியில் இருந்து
"உண்மையான " புரட்சித் தலைவி
அன்னை இந்திராகாந்திஅம்மையார்
அவர்களிடம் இருந்து ஒரு
தொலைபேசி அழைப்பு ஒன்று
வந்தது.
இருவரும் என்ன பேசினார்கள் ?
என்ன முடிவு எடுத்தார்கள் ? இந்த
விபரங்கள் அனைத்தும் ஒரு சிறிய
விளம்பர இடைவேளைக்குப் பிறகு
உங்களின் கனிவான கவனத்திற்கு
வழங்கிடப்படும். அதுவரை சற்றுப்
பொறுத்திருங்கள் எனது அன்புத்
தமிழ் உடன்பிறப்புகளே !! (PLEAE
HOLD ON LINE TILL SUCH TIME OF
INTERVAL !! O.K.)
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R.பாலு. M.A.S.,
No comments:
Post a Comment