Saturday, 14 December 2013

மதுரை மாநகரின் வீதிகளுக்கு வைக்கப்பட்ட பெயர்களின் பின்னணி என்ன ? ஒரு கருத்து ஆய்வுக் கட்டுரை !!--உங்களின் கனிவான கவனத்திற்கு !!

உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!! 



உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் 



என் உயிரினும் மேலான அன்புத் 



தமிழ் உடன்பிறப்புகளே!!                         



உங்கள் அனைவருக்கும் எனது 



இனிய காலை வணக்கம் 



உரித்தாகட்டும்.                                               




அன்பர்களே !! முத்தமிழ் அறிஞர் 



தலைவர் கலைஞர் அவர்கள் தமது 



வரலாற்றுச் சிறப்புமிக்க 



வசனங்களைப் பதிவேடுகளில் 



பதியம் செய்து சிறப்பித்த படங்கள் 



என்று எத்தனை எத்தனையோதமிழ் 



திரைப்படங்கள் உண்டு. அவற்றுள் 



மிகச் சிறந்த படைப்பானதும் 



கணேசன் என்று அழைக்கப்பட்ட 



ஒரு நடிகரை பிற்காலத்தில் புகழ் 



பெற்ற " நடிகர் திலகம் "  என்று 



பெயரெடுத்த நடிப்புலக மேதையை 



இந்தத் தமிழ்த் திரையுலகிற்கு 



அறிமுகம் செய்து சிறப்பித்த 



திரைக்காவியமும் ஆன     படம்தான்  


" பராசக்தி " ஆகும். அதில் கலைஞர் 



ஒரு இடத்தில் ஒரு 



அர்த்தபுஷ்டியுள்ள வசனம் 



ஒன்றினை குறிப்பிட்டு இருப்பார். 



அது என்னவென்றால் :-       



வானகமே !!  வையகமே !!                     



வந்தாரைவாழவைக்கும்தமிழகமே!!



நீ சொந்த நாட்டுக்காரனை சுரண்ட 



ஆரம்பித்தது எப்போது ? என்று ஒரு 



மிகச்சிறந்த வசனம் ஒன்றை அந்தப் 



படத்தில் தலைவர் கலைஞர் 



அவர்கள் அங்கே பதிவு செய்து 



இருப்பார். அப்படி சிறப்பு பெற்ற         



வந்தாரை வாழவைக்கும் தமிழகம் 



இதில் இந்த மாநிலத்தில் 



எத்தனயோ நகரங்கள் 



இருந்தாலும்கூட  அவைகள் 



அத்தனையும்"ம து ரை" மாநகருக்கு 



ஈடாகுமா ? என்று ஒரு கேள்வியை 



நாம் எழுப்புவோமேயானால் அந்தக் 



கேள்விக்கான விடை :- இல்லை 



என்ற சொல்லைத் தவிர வேறு 



இல்லை என்பதே ஆகும் என்பது 



ஆன்றோர்களும், அறிவிற் சிறந்த 



சான்றோர்களும் ஏற்றுக்கொண்ட 



உண்மை என்பதே உண்மையிலும் 



உண்மை. ஏன்  அப்படி ஒரு சிறப்பு 



இந்த மதுரை மாநகருக்குமட்டும் ? 



உங்களது கேள்வியில் நியாயம் 



என்பது இல்லாமல்  இல்லை. இப்படி 



ஒரு வரலாற்றுச் சிறப்பு இந்த 



மதுரை மாநகருக்கு வந்ததற்கு 



இரண்டு காரணங்கள் உண்டு 



எனலாம். அவை என்னென்ன ? 



இதோ பதில்:-    



1)  இயல்,இசை,நாடகம் ஆகிய 



முத்தமிழுக்கும் சங்கம் அமைத்துத் 



தமிழ் மொழிக்குச் சிறப்பு செய்திட்ட 



பெருமைதனைப் பெற்றதொரு 



காரணம் !!                                                         



2)  இறைவன் எம்பெருமான் சிவனது 



இரு பாதங்களாலும் இந்தத் 



தமிழகத்தை,தமிழ் மண்ணை 



மிதித்து சிறப்பு செய்திருந்தாலும் 



கூட, இந்த மாமதுரை நகரின் 



மண்ணைமட்டுமே, சிவபெருமான் 



தனது தலையில் வைத்துத் தூக்கி 



மதுரை மண்ணிற்குப் 



பெருமைதனை ஏற்படுத்தியது இது 



இரண்டாவது மிக முக்கியமான 



காரணம் ஆகும்!! (பிட்டுக்கு மண் 



சுமந்த லிலை )           



இது தவிர எமது ஆய்வினில் நான் 



அறிந்த மற்றும் ஒரு உண்மை தமிழ் 



மாதங்களை இந்த மாநகரின் 



தெருக்களுக்கு வைத்துப் பெருமை 



பெறச் செய்தது மூன்றாவது 



காரணம் ஆகும்.                                           



சரி !! நேயர்களே !!அந்த மாமதுரை 



நகர் தெருக்களுக்கு/வீதிகளுக்கு 



அப்படி எப்படி முன்னோர்கள் 



காலத்தில் தமிழ் மாதங்களின் 



பெயர்கள் சூட்டப்பட்டது ? என்ற 



விபரத்தை நாம் இப்போது 



பார்ப்போமா நேயர்களே !!                       



இந்த இடத்தில் நான் 196௦ம் 



ஆண்டுகளில் அல்லது அதற்கு 



சற்றேறக்குறைய/கூடிய சில 



ஆண்டுகளுக்கு முன்போ அல்லது 



பின்போ இந்த(த்தமிழ்நாடு)மதராஸ் 



மாநிலம், உண்மையான தியாகி, 



கறையேதும் படிந்திடாத கரங்களு 



க்குச் சொந்தக்காரரும், எங்கே தான் 



திருமணம் செய்து கொண்டால்,தாம் 



அதுவரை இந்த நாட்டின் மீதும், 



நாட்டு மக்களின் மீதும்கொண்டுள்ள 



பற்று,பாசம்,நேசம் குறைந்துபோய், 



தன் வீடு, தன் மனைவி, தன் மக்கள் 



என்கின்ற நினைவுகள் எங்கே 



தம்மைஆட்கொண்டுவிடுமோ,என்று 



எண்ணி அஞ்சி, அதன் காரணமாக 



தனது ஆயுட்காலம் முழுவதுமே 



தான் திருமணம் செய்து 



கொள்ளாமல் உண்மையானகட்டை 



பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து 



மறைந்தவர். இறுதிமூச்சு இவரது 



உடலைவிட்டுப் பிரியும் வரை 



உண்மையான பிரம்மச்சாரியாகவே 



வாழ்ந்ததினால் இவருக்கு யாரும்  



"செல்வர் " என்று பெயருடன் இவர் 



பெயரை அழைத்ததும் கிடையாது. 



தன்னை எல்லோரும் "அப்பா " 



என்றே அழைக்க வேண்டும் என்று 



எழுதப்படாத அரசாங்க 



ஆணைதனைப் பிறப்பித்தவரும் 



இவர் இல்லை. காந்தீயத்தின் 



கடைசி வாரிசு, நேர்மையின் 



மறுபிறப்பு, நீதியின்,நியாயத்தின், 



உண்மையின், சத்தியத்தின் பதிப்பு, 



இத்தனை நல்ல குணங்களுக்குச் 



சொந்தக்காரர் இவர் மட்டுமே.  இவர் 



உயிர் பிரிந்து இவரது திருமலைப் 



பிள்ளை வீதி வீட்டில் கட்டிலின் மீது 



இவரது பூத உடல் கிடந்திடும் போது 



இவர் அதுவரை சேர்த்து வைத்த 



மொத்த அசையும் அசையா 



சொத்துக்களின் மதிப்பு என்ன 



தெரியுமா அன்பர்களே நான் 



உண்மையைக் கூறுகிறேன் இவரது 



தலையணைக்கு அடியில் இருந்த 



வெறும் 11௦ ரூபாயும் 5௦ பைசாவும் 



பீரோவில் உள்ள இரண்டு செட்கள் 



கதர் வேட்டியும் சட்டையும் 



மட்டுமே(கட்டியிருக்கும்ஆடைதவிர)



இதனை இங்கே பதிவு செய்திடும் 



நேரத்தில் எனது கண்களில் இருந்து 



கண்ணீர் குற்றாலத்து அருவிபோல 



வழிந்து கொண்டு இருக்கிறது.இவர் 



ஒரு இந்தக்கால அரசியலுக்கு 



இலாயக்கற்றவர், பலபல தலை 



முறைகளுக்கு என்று ஆயிரமாயிரம் 



கோடிகளுக்கு அசையும் அசையா 



சொத்துக்கள் சேர்த்திடும் ஆற்றல் 



அற்றவர், தனக்கு என்று தனியாக 



ஒரு தொலைகாட்சி நிறுவனத்தை 



உருவாக்கிடும் துப்புகெட்ட மனிதர், 



தான்  அவ்வப்போது தனது 



" தோழருடன் "மலைநாடுசென்று 



அங்கு தேயிலை எஸ்டேட்டுகளை 



தான் அரசியலில் மாநில 



முதல்வராக பணியாற்றி 



அதன்மூலமாக  பல்லாயிரம் 



கோடிகள் மக்களின் வரிபணத்தைக் 



கொள்ளையடித்து பினாமிகள் 



பெயரில் வாங்கி, அங்கே சொகுசு 



மாளிகையை உருவாக்கி, அந்த 



மாளிகைக்கு செல்லும் வீதி, அதைத் 



தான் மட்டுமே பயன்படுத்த 



வேண்டும், தனக்கு வாக்களித்த 



முட்டாள் பொதுஜனம், எக்கேடும் 



கெட்டுப் போகட்டும் என்ற எண்ணம் 



மிகக் கொண்டு, அங்கே சென்று 



ஓய்வு எடுத்து, அங்கே சல்லாப சரச 



லீலைகளில் தன்னை ஈடுபடுத்திக் 



கொண்டு, காமக் களியாட்டம் 



செய்திடும், கலைகளைக் கற்று 



அறிந்திடாதவர், என்ற இதுபோன்ற 



பலப்பல விஷயங்களினால்தான், 



எல்லாம்வல்லஇறைவன் பார்த்தார், 



சரி, இவர் மனமும் வெள்ளை, இவர் 



அணியும் உடையும் வெள்ளை, 



ஆனால், இவர் நிறம்மட்டுமே கறுப்பு 



எனவே இவரது  கரங்களில் 



நிச்சயமாக கறை படிந்திட வாய்ப்பே 



இல்லை எனவே இனிமேலும் இவர் 



இங்கு உயிருடன் இருக்க தேவை 



இல்லை என்பதாலும் இனிமேல் 



இந்த தமிழ்நாடும் இந்த நாட்டு 



மக்களும் நாசமாகப் போகட்டும் 



என்று இறைவன் 



முடிவெடுத்ததினால் இவர் உண்மை 



காந்தீய வாதி என்பதால் 



காந்திபிறந்த நாளிலேயே இவர் 



உயிர் பிரிவது மிகவும் பொருத்தம் 



நிறைந்ததாக இருக்கும் என்று 



கருதியதால்தானோ என்னவோ 



அக்டோபர் மாதம் 2 ம் தேதி 1975ம் 



ஆண்டு இவர் உயிர் பிரிந்து 



இறைவன் காலடி சேர்ந்தவர், இந்த 



இத்தனை பெருமைகளுக்கும் 



சொந்தக்காரர் மறைந்த கர்மவீரர் 



K.காமராஜ் என்ற உண்மை மக்கள் 



தொண்டர், இவர் 1954-1963 இந்த 



காலகட்டங்களில் மதராஸ் 



மாநிலத்தின் முதல் அமைச்சராகக் 



கடமையாற்றிவரும் வேளையில்   



சென்னை மாகாணத்தில் உள்ள 



நகர வீதிகள் அனைத்தையும் 



மறுசீரமைப்பதற்கு/மறுவடிவம் 



அமைப்பதற்குஎனஉருவாக்கப்பட்ட 



குழுவினர் சோவியத் ரஷ்யாசென்று 



அங்கே வீதிகள் அமைக்கப்பட்டு 



இருக்கும் வடிவைக் கண்டு வர 11 



உறுப்பினர்களைக் கொண்ட 



குழுவினரின் வெளிநாட்டுப்பயணத் 



திட்ட வரைவு அறிக்கை 



முதலமைச்சர் K.காமராஜ் 



அலுவலகத்தில் அவரின் 



ஒப்புதலுக்காக கோப்புகள் வைக்கப் 



பட்டபோது தலைமைச் 



செயலாளரை அழைத்த இவர், 



எதுக்கு மக்கள் துட்டைப் போய் 



இப்படி வீணடிக்கிரீங்கன்னு 



கேக்கிறேன்னேன். எல்லா 



அதிகாரிங்களையும் மதுரைக்குப் 



போயி அந்த ஊர்ல உள்ள 



தெருக்களின் அமைப்பைப்பாத்துட்டு 



வரச்சொல்லுங்கன்னேன் என்றாரே 



பார்க்கலாம். நான் எதற்காக இந்த 



வரலாற்றுச் சம்பவத்தை இங்கே 



நினைவு படுத்துகிறேன் என்றால் 



அந்த அளவிற்கு மதுரைமாநகரின் 



வீதிகளின் வடிவமைப்பு பெருமை 



பெற்றது. இந்த மதுரை மாநகரம்அது 



தோற்றுவிக்கப்பட்ட அந்தக் 



காலகட்டத்திலேயே 



மீனாட்சியம்மன் கோவிலை 



மையமாக வைத்து வீதிகள் 



வடிவமைக்கப் பட்டது நேயர்களே. 



கோவிலின் உள்ளே அமைந்திட்ட 



முதல் வீதியின் பெயர் ஆடி வீதி 



(தமிழ் மாதம் ஆடியின் பெயர் ) 



இதனை அடுத்து உள்ள வீதியின் 



பெயர் ஆவணி மூல வீதி. (தமிழ் 



மாதம் ஆவணியின் பெயர்) இதற்கு 



அடுத்து உள்ள வீதியின் பெயர் மாசி 



வீதி.(தமிழ் மாதம் மாசியின் பெயர்) 



அத்துடன் மக்கள் வசிக்கும் 



தெருக்கள் முடிவடைந்துவிட்டதால் 



கடைசியாக உள்ள வீதியின் பெயர் 



வெளி வீதி. அந்தக்கால மதுரை 



மாநகரின் மொத்தப் பரப்பளவு 



இத்தோடு நிறைவு பெறுகிறது 



அன்பர்களே !!  இத்தனை விபரங்கள் 



கொண்ட எனது இந்தக் கட்டுரையும் 



இத்துடன் நிறைவு பெறுகின்றது. 



மீண்டும் எனது அடுத்த 



MY PERSONAL VIEWS தள பதிவில் 



உங்கள் அனைவரையும் நான் 



சந்திக்கிறேன் எனது கன்னங்களில் 



வழிந்திடும் கண்ணீரைத் 



துடைத்தபடியே !!



நன்றி !!வணக்கம்!!                                   



அன்புடன். மதுரை T.R. பாலு. 

No comments:

Post a Comment