வாழ்க தமிழ் !! வெல்க தமிழ் இனம் !!
தமிழனுக்கு கிடைத்த அநீதி
அனைவருக்கும் வணக்கம்.நேற்றைய தினம் நமது தலைநகர் புது தில்லியில் உள்ள பாராளுமன்றத்தில் நடைபெற்ற இலங்கை தமிழர் பற்றிய சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் மிகுந்த ஆவேசத்துடனும் மனம் நிறைந்த சோக வடிவுடனும் தத்தமது கருத்துக்களை விவாதத்தின்போது பதிவு செய்த காட்சியினை தொலைகாட்சியில் நேரடி ஒளி பரப்பு என்னும் நிகழ்ச்சியில் பார்த்தேன்.வழக்கம்போல இந்த நாட்டின் தற்போதைய வெளி உறவுத்துறை அமைச்சர் திரு சல்மான் குர்ஷித் அவர்கள் வெண்ணை நிறைந்த பாத்திரத்தில் விளக்கெண்ணையை விட்டு குழப்பியதை போல ஏதேதோ சொன்னார். என் மனம் கடந்த கால நிகழ்வுகளை காண சற்று பின்னோக்கிப் பயணித்தது.
அப்போதைய கிழக்கு பாகிஸ்தான் நாட்டில் (தற்போதைய வங்க தேசம்)தற்போது இலங்கையில் நடைபெற்றுவருவது போல அன்னாட்டிலும் இனப் பிரச்சனை இன ப்படுகொலைகள் நடந்து கொண்டிருந்த காலம். அப்போதைய நம் நாட்டு பிரதமர் மறைந்த அன்னை இந்திரா காந்தி அவர்கள் மிக துணிச்சலுடன் பாகிஸ்தான் நாட்டு இராணுவத்துடன் போரிட்டு அந்நாட்டு மக்களை காப்பாற்றி தனி நாடு அமைத்து தந்தார்.அந்த நாடு தான் இன்றைய வாங்க தேசம். ஆனால் இன்று அவர் பெயரை சொல்லி பிழைப்பு நடத்தும் காங்கிரஸ் மத்திய அரசு ஏனோ தானோ என செயல்பட்டதினால் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு மண்ணோடுமன்னாகப் போனதுதான் உண்மை.
மத்திய அரசே.அது என்ன வங்க தேசத்துக்கு ஒரு நீதி.இங்கே இலங்கைக்கு ஒரு நீதி. அப்போது எனது அரசில் ஆலோசகர் நான் பெயர் குறிப்பிட விரும்பவில்லை,அவர் என்ன சொன்னார். கிழக்கு பாக்.மக்கள் பேசுவது இந்தி மொழி அதனால் அங்கே நீதி கிடைத்தது.இங்கே இலங்கையில்செத்த செத்து கொண்டு இருக்கிற,இனிமேல் சாகப்போகிற மக்கள் பேசுவது தமிழ் மொழிதானே.அவன் என்றும் இளிச்ச வாயன் தானே.சூடு சொரணை இல்லாதவன் தானே என்று மத்திய அரசு எண்ணியதால் இங்கே இலங்கையில் அந்த தமிழ் மக்களுக்கு அவர்கள் விரும்பிய தமிழ் ஈழம் கிடைக்கவில்லை. வங்கத்து மக்களுக்கு ஒரு நீதி.தங்க தமிழனுக்கோ கிடைப்பது அநீதி. காலம் இப்படியா போய் விடாது.என்றாவது ஒரு நாள் நீதி கிடைக்கும்.தனி தமிழ் ஈழம் மலரும் அந்த நாளும் விரைவில் வரத்தான் போகிறது.அதுவரை பொறு மனமே பொறு.ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பாராளுமன்ற இடம் கூட கிடைக்காது.இது தமிழன் மத்திய அரசுக்கு திருப்பி கொடுக்கும் தர்ம அடி.பாவம் தமிழக காங்கிரஸ்.பரிதாபம் அவர்கள் நிலை.ஆண்டவனால் கூட அந்த கட்சியை காப்பாற்ற முடியாது! நன்றி.வணக்கம்.
No comments:
Post a Comment