Monday, 25 February 2013

குடிப்பழக்கம்

குடி குடியை கெடுக்கும்! குடி பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்!! 

வணக்கம்.இன்று திரைப்படங்கள் அனைத்திலும் முதலில் மேலேசொன்ன வாசகத்தை காண்பித்துவிட்டு பிறகு படம் முழுவதும் ஒரே குடிமயமே எல்லா காட்சிகளும்.இது என்ன நாகரீகமோ?தெரியவில்லை.
அரசாங்கம் விலை இல்லா (இலவசம் என்றால் கேவலமாம்)பொருட்கள் வழங்கி வருகிறது.அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும்.விபரம் பாருங்கள்:-
                          மிக்சி ,, ,, ,, ,,ரூ. 1,௦௦௦-௦௦
             கிரைண்டர் =====ரூ.  3,000-00
              மின் விசிறி ...........ரூ. 2,௦௦௦ -௦௦ ஆக மொத்தம் ரூ.6,௦௦௦-௦௦.
இலவச அரிசி மாதம் 
2௦ கிலோ x ரூ.8.00வீதம் 
ரூ.160-00x60 மாதம்............ரூ.9,600-00 ஆக மொத்தம் ஏறத்தாழ ருபாய் 16,000-00 அரசின் மூலமாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு இலவசமாக வழங்க படுகிறது. இப்போது வேறு ஒரு 
கோணத்தில் பாருங்கள்.
ஒரு குடும்ப அட்டை உள்ள குடுமத்தில் ஒருவர் குடிக்கிறார் என்று வைத்து கொள்வோம்.ஒரு நாள் ரூ.1௦௦/-௦௦ வீதம் ஒரு மாதம் ரூ.3,௦௦௦-௦௦ ஒரு வருடம் ரூ.36,௦௦௦-௦௦ ஐந்து வருடங்களுக்கு ரூ.1,80,000-00.
மொத்தத்தில் வெறும் ருபாய் 16,௦௦௦-௦௦ கொடுத்து விட்டு அந்த குடும்பத்தில் இருந்து அரசாங்கம் எவ்வளவு சம்பாதிக்கிறது பாருங்கள் நேயர்களே!இந்த இலவசங்கள் நமக்கு தேவையா?  குடியும் அவசியமா?சிந்திப்பீர்.செயல்படுவீர்.                                  

No comments:

Post a Comment