குணம் எப்படி இருக்கும்?
அனைவருக்கும் வணக்கம்.இன்றைய தினம் நான் உங்களில் அனைவரின் சிந்தனைக்கும் அளிக்கும் விருந்து! "குணம் எப்படி இருக்கும்" என்பதுவே!
பொதுவாக மனித இனத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குணம் இருப்பது இயற்கை.அதை எப்படி அளப்பது?எப்படி எடை போடமுடியும்?இத்தகைய கேள்விகளுக்கு கீழ்க்கண்ட பாடல் தரும் விளக்கம் தான் என்ன?
முதலில் பாடலை பாப்போம்:-
நீரளவே ஆகுமாம் நீராம்பல்!
தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு!!
மேலைத்தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்!!!
குலத்தளவே ஆகுமாம் குணம்!!
என்ன ஒரு அருமையான பாடல்.குளம் நிறைய தண்ணீர் உள்ளது.அந்த குளத்தில் நீர் எவ்வளவு உயரம் உள்ளதோ அந்த உயரம் வரை வளர்ந்து தாமரை பூ பூக்கும்.
அதுபோல நாம் எவ்வளவு கல்வி கற்று அதில் தேர்ச்சி பெறுகிறோமோ அந்த அளவு நமது மூளையில் நுண்ணறிவு இருக்கும்.
அதுபோல முந்திய பிறவியில் நாம் எவ்வளவு தானம்,தர்மம் புண்ணியம் செய்து உள்ளோமோ அந்த அளவுக்குத்தான் நமக்கு செல்வநிலை என்பது இந்த பிறவியில் இருக்கும்.
அதுபோல நாம் பிறந்துள்ள குலத்தின் அடிப்படையில் அந்த சிறப்பின் அடிப்படையில் அந்த பிரிவின் தகுதிப்படி மட்டுமே நமக்கு குணம் என்பது அமையும் என சங்க கால பாடல்கள் நமக்கு கூறி சென்றுள்ள கருத்துக்கள் மனித குலம் மறையும்வரை மாறுவது இல்லை என்பதே ஆன்றோர்கள் வாக்கு!மீண்டும் நாளை அடுத்த "எண்ணத்தில் தோன்றியவை"நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்.அதுவரை வணக்கம் கூறி விடை பெறுவது உங்கள் அன்பன் மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment